Sunday, January 8, 2012

கடிகாரத்தின் புலம்பல்.

என்ன...
தவறு செய்தேன் 
பிறக்கும்போது 
ஓடதொடங்கும் என்பயணம் 
இறக்கும்வரை நிற்பதேஇல்லை
பாவம் மனிதர்கள்,
என் ஓட்டத்தை பிடிக்கமுடியாமல் 
ஓழ்ந்து போகின்றனர்.
திட்டம் போட்டு ஒரு வட்டத்தில் 
அடைத்தாலும் - சட்டம் போட்டு 
என் பயணத்தை தடுக்கமுடியாது.
உலக மக்கள் அனைவரும்  
ஒருமுறையாவது என்னை பார்க்காமல் 
இருக்கமாட்டார்கள்.
தடைகளைத்தாண்டி 
ஓடிக்கொண்டிருக்கும் என்னால் 
ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட
வாங்கமுடியவில்லை என்பதே
மிகபெரிய வருத்தம்.
இப்படிக்கு கடிகாரம்.    
   

 

கவிதை பேசுகிறது.

 
இரு உடல்கள் 
பரிமாரிகொல்லும்போது
உயிர்கள் பிறக்கிறது 
அதற்கு பிறப்பும் இறப்பும் 
ஒரு முறைதான்.
-----------------------------------------
இரு உள்ளங்கள் 
பரிமாரிகொல்லும்போது 
நான் பிறக்கிறேன் 
என்றும் இறப்பு இல்லாதவனாக.
-------------------------------------------
உயிர்கள் 
வளர்ந்து உறவாடிகொள்ள 
மொழி தேவை,
உள்ளங்கள் 
இரண்டும் இடம்மாரிகொள்ள 
நான் தேவை,
-------------------------------------------
ஒரு முறை பிறந்து...
ஒரு முறை இறக்கும் 
மனித உள்ளங்களில் 
கோடி முறை பிறந்து 
ஒரு முறை இறக்கிறேன் 
தோல்வியடையும்போது மட்டும்.
--------------------------------------------
உறவுகள் பிரிந்தாலும் 
உள்ளங்களை மறந்தாலும் 
நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் 
உயிரற்ற ஜீவனாக நான்,
இப்படிக்கு கவிதை. 
                                  --------பாலா----      



Thursday, January 5, 2012

கெட்டவார்த்தை.

பள்ளியில்
சேரும்போதுதான் கேட்டேன்
அந்த கெட்டவார்த்தையை
விவரம் இல்லாத வயசு
நானும் ஒருமுறை உச்சரித்துவிட்டேன்.
------------------------------------------------------
கல்லூரியில்
சேரும்போதும் அதே
கெட்டவார்த்தை விண்ணப்பதாளில்
தீயில் விழுந்த பஞ்சாக
சுருங்கிவிட்டது முகம்.
-----------------------------------------------------------
வாங்கிய பட்டத்தை
பதிவு செய்ய போனேன்
அங்கும் அதே கெட்டவார்த்தை
பளிச்சென்று அறைவதுபோல் தெரிந்தது.
------------------------------------------------------------
வேலைக்கு
செல்வதற்காக - அதே
கெட்டவார்த்தையை
ஒரு முறை எழுதும்போது
மரத்துப்போனது மனம்.
-------------------------------------------------------------
சட்டத்தை
எழுதிய சாதனை
மனிதனை சாகடித்ததும்
இந்த கெட்டவார்த்தைதான்.
-------------------------------------------------------------
ஊருக்கு
ஒரு கட்சி இருக்கு
இந்த வார்த்தையை சுமந்துகொண்டு.
மேடபோட்டு தாட வலிக்காமல்
இந்த கெட்டவார்த்தையை உச்சரிக்கும்போது
சாட  மாடயாக திட்டி இருக்கிறேன்.
---------------------------------------------------------------
இந்த நாடும்
நாட்டு மக்களும்
நாசமாய் போக காரணம்
வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்
இந்த கெட்டவார்த்தைதான்.
எனக்குள்...
பேசியவாறே முகசவரம்
செய்துகொண்டிருந்தேன்.
என் புலம்பலை கேட்டிருக்குமோ,
"எல்லா ஜாதி ரத்தமும் ஒரே நிறம்தான் "
சிரித்தது கையில் இருக்கும் கத்தி.
                                                          ----பாலா ----
  

மௌன மொழிகள்.




நான் யார் என்று....

தேடிகொண்டிருந்தேன்

விடை தேடும் பள்ளிமாணவாக,

எதுவும் பிடிபடவில்லை

நீரில் விழுந்த மழைதுளி போல்.

வரலாறும் தெரியாது

வாழ்க்கை பற்றியும் தெரியாது.

காலம் பல கடந்துவிட்டது

இன்றளவும் அதே கலங்கிய மனநிலையோடு.

எதாவது செய் என சொல்லும் மனது

என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறது.

ஊக்குவிக்க ஆள் இருந்தால்

"ஊக்கு" விற்பவன் கூட உலகை ஆள்வான்.

யாருக்கு தெரியும் ...

என்னை போல எத்தனை மனங்கள்

மௌன மொழிகளில் பேசிக்கொன்டிருக்கிறதோ!

                                       ---பாலா----

Sunday, January 1, 2012

காலச்சுவடு


கிசு கிசு..



கன்னியாகத்தான்
இருந்தேன் - யாரும் 
கண்டுகொள்ளவில்லை.
உன் கரம் பட்டவுடன் தான்
பூப்படைந்தேன்.
இப்போது என்னை காண 
எத்தனை கண்கள்.
வரிகள் எனும் வாரிசை
என் வயிற்றில் சுமக்கிறேன்
படிக்கும் கண்களுக்கு 
தெரியாமளாபோகும் - நான் 
கருவுற்றிருப்பது.
பேனாவிடம் காகிதம் கிசு கிசுத்தது. 
                           ----பாலா---   

சுகப்பிரசவம்