கத்தியின் கூர்மையும்
புத்தியின் கூர்மையும்
எனக்கு அடிமை.
வெற்றிடங்களுக்கு
விளக்கம் கொடுப்பதும்
முகவரி தெரியாதவனுக்கு
முகவரி கொடுப்பதும் என் கடமை.
இதிகாசங்களை துறந்து
இலக்கியங்களை கடந்து
எதிர்காலத்தை தான்டியும்
என் பயணம் தொடரும்.
வல்லுனர்கள் கூட- என்
வயதை கணிக்க விழி பிதுங்குவர்.
சிறிய சாதனைக்காக
பெரிய பேனர்களில் என் கண்ணீரை
காசாக்கும் போது - வலிதாங்கமல்
வழக்கத்தை விட அதிகமாக அழுதுவிடுகிறேன்.
அதுகூட அவர்களுக்கு மிகபெரிய விளம்பரம்தான்.
எத்தனை வரலாற்றை
எழுதி இருந்தும் - தான்
என்ற அகங்காரம் இல்லாமல்
தலை குனிந்தே வாழ்கிறேன்.
என்னை அடிமை படுத்துபவன்
என்போல் தன்னடக்கத்தோடு வாழாமல்
தலை நிமிர்ந்து பீழ்த்திக்கொல்லும்போது மட்டும்
மௌனமாய் சிரிக்குறேன்.
---------பாலா-------
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.