*விரும்பியதை
செய்வது சுதந்திரம்
செய்வதை
விரும்புவது சந்தோசம்
நான் விரும்பியேசெய்தேன்.
---------------------------------------------------
*என்..
வெற்றி தோல்விக்கு
நானே காரணம்.
கணவை நேசிப்பவனுக்கு
இரவு நீளமானது.
விடியலை தேடுவோருக்கு
பகல் நீளமானது
இரவும் பகலும் போல
என் வாழ்வில் இன்பமும்
துன்பமும்.
---------------------------------------------------------
*இலக்கு
என்னவென்றே தெரியாமல்
இயங்குகிறது என் வாழ்க்கை
கானல் நீராய்.
கஷ்டபடாமல்
கிடைக்கும் என நினைப்பதும்
இஷ்டப்பட்டு ஒன்றை
தொலைப்பதும் - முட்டாள்
தானம் தான்.
------------------------------------------------------------
*ஆற்றங்கறையில் ஆறுதலுக்காக
நானே பேசிகொண்டிருந்தேன்
தீடிர் என்று ஒரு குரல்
இயற்கை என்னுடன் பேசியது.
"நான் கற்று தருகிறான்
வாழ்க்கை எப்படி
வாழ்வதென்று"
---------------------------------------------------------
*தெளிவில்லாத மனித இனமே!
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
தாங்கிகொள் என்னைபோல -
நிலம்.
---------------------------------------------------------
*வழி யாரும் காட்டவேண்டாம்
நியே ஒரு பாதையை
உருவாக்கு என்னைபோல - நீர்.
------------------------------------------------------
*எப்போதும் நான்
மேல்நோக்கியே எறிகிறேன்
அதுபோல உன் சிந்தனையும்
மேல்நோக்கியே இருக்கட்டும்
- நெருப்பு.
------------------------------------------------------------
*என்னைபோல பறந்து
விரிந்த பேராசையை விடு
நான் நிலையானவன். அதுபோல்
ஓரிடத்தில் நிலையாக வாழ
கற்றுகொள் - வானம்.
-------------------------------------------------------------------------
*எங்கும்
பரவி இருக்கும் என்னைபோல
உன் புகழ் உலகெங்கும்
பரவ வேண்டும் - காற்று.
---------------------------------------------------------------------------
*இப்படி
ஐம்பூதங்களும் என்
ஐம்புலன்களுக்கு
காட்சி தந்ததால் இனி
விடியலை
தேடும் என் மனம் வினா? எழுப்பாது !!!
---------------------விடியலுடன் பாலா
---------------
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.