பள்ளியில்
சேரும்போதுதான் கேட்டேன்
அந்த கெட்டவார்த்தையை
விவரம் இல்லாத வயசு
நானும் ஒருமுறை உச்சரித்துவிட்டேன்.
------------------------------------------------------
கல்லூரியில்
சேரும்போதும் அதே
கெட்டவார்த்தை விண்ணப்பதாளில்
தீயில் விழுந்த பஞ்சாக
சுருங்கிவிட்டது முகம்.
-----------------------------------------------------------
வாங்கிய பட்டத்தை
பதிவு செய்ய போனேன்
அங்கும் அதே கெட்டவார்த்தை
பளிச்சென்று அறைவதுபோல் தெரிந்தது.
------------------------------------------------------------
வேலைக்கு
செல்வதற்காக - அதே
கெட்டவார்த்தையை
ஒரு முறை எழுதும்போது
மரத்துப்போனது மனம்.
-------------------------------------------------------------
சட்டத்தை
எழுதிய சாதனை
மனிதனை சாகடித்ததும்
இந்த கெட்டவார்த்தைதான்.
-------------------------------------------------------------
ஊருக்கு
ஒரு கட்சி இருக்கு
இந்த வார்த்தையை சுமந்துகொண்டு.
மேடபோட்டு தாட வலிக்காமல்
இந்த கெட்டவார்த்தையை உச்சரிக்கும்போது
சாட மாடயாக திட்டி இருக்கிறேன்.
---------------------------------------------------------------
இந்த நாடும்
நாட்டு மக்களும்
நாசமாய் போக காரணம்
வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்
இந்த கெட்டவார்த்தைதான்.
எனக்குள்...
பேசியவாறே முகசவரம்
செய்துகொண்டிருந்தேன்.
என் புலம்பலை கேட்டிருக்குமோ,
"எல்லா ஜாதி ரத்தமும் ஒரே நிறம்தான் "
சிரித்தது கையில் இருக்கும் கத்தி.
----பாலா ----

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.