Sunday, January 8, 2012

கடிகாரத்தின் புலம்பல்.

என்ன...
தவறு செய்தேன் 
பிறக்கும்போது 
ஓடதொடங்கும் என்பயணம் 
இறக்கும்வரை நிற்பதேஇல்லை
பாவம் மனிதர்கள்,
என் ஓட்டத்தை பிடிக்கமுடியாமல் 
ஓழ்ந்து போகின்றனர்.
திட்டம் போட்டு ஒரு வட்டத்தில் 
அடைத்தாலும் - சட்டம் போட்டு 
என் பயணத்தை தடுக்கமுடியாது.
உலக மக்கள் அனைவரும்  
ஒருமுறையாவது என்னை பார்க்காமல் 
இருக்கமாட்டார்கள்.
தடைகளைத்தாண்டி 
ஓடிக்கொண்டிருக்கும் என்னால் 
ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட
வாங்கமுடியவில்லை என்பதே
மிகபெரிய வருத்தம்.
இப்படிக்கு கடிகாரம்.    
   

 

கவிதை பேசுகிறது.

 
இரு உடல்கள் 
பரிமாரிகொல்லும்போது
உயிர்கள் பிறக்கிறது 
அதற்கு பிறப்பும் இறப்பும் 
ஒரு முறைதான்.
-----------------------------------------
இரு உள்ளங்கள் 
பரிமாரிகொல்லும்போது 
நான் பிறக்கிறேன் 
என்றும் இறப்பு இல்லாதவனாக.
-------------------------------------------
உயிர்கள் 
வளர்ந்து உறவாடிகொள்ள 
மொழி தேவை,
உள்ளங்கள் 
இரண்டும் இடம்மாரிகொள்ள 
நான் தேவை,
-------------------------------------------
ஒரு முறை பிறந்து...
ஒரு முறை இறக்கும் 
மனித உள்ளங்களில் 
கோடி முறை பிறந்து 
ஒரு முறை இறக்கிறேன் 
தோல்வியடையும்போது மட்டும்.
--------------------------------------------
உறவுகள் பிரிந்தாலும் 
உள்ளங்களை மறந்தாலும் 
நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் 
உயிரற்ற ஜீவனாக நான்,
இப்படிக்கு கவிதை. 
                                  --------பாலா----      



Thursday, January 5, 2012

கெட்டவார்த்தை.

பள்ளியில்
சேரும்போதுதான் கேட்டேன்
அந்த கெட்டவார்த்தையை
விவரம் இல்லாத வயசு
நானும் ஒருமுறை உச்சரித்துவிட்டேன்.
------------------------------------------------------
கல்லூரியில்
சேரும்போதும் அதே
கெட்டவார்த்தை விண்ணப்பதாளில்
தீயில் விழுந்த பஞ்சாக
சுருங்கிவிட்டது முகம்.
-----------------------------------------------------------
வாங்கிய பட்டத்தை
பதிவு செய்ய போனேன்
அங்கும் அதே கெட்டவார்த்தை
பளிச்சென்று அறைவதுபோல் தெரிந்தது.
------------------------------------------------------------
வேலைக்கு
செல்வதற்காக - அதே
கெட்டவார்த்தையை
ஒரு முறை எழுதும்போது
மரத்துப்போனது மனம்.
-------------------------------------------------------------
சட்டத்தை
எழுதிய சாதனை
மனிதனை சாகடித்ததும்
இந்த கெட்டவார்த்தைதான்.
-------------------------------------------------------------
ஊருக்கு
ஒரு கட்சி இருக்கு
இந்த வார்த்தையை சுமந்துகொண்டு.
மேடபோட்டு தாட வலிக்காமல்
இந்த கெட்டவார்த்தையை உச்சரிக்கும்போது
சாட  மாடயாக திட்டி இருக்கிறேன்.
---------------------------------------------------------------
இந்த நாடும்
நாட்டு மக்களும்
நாசமாய் போக காரணம்
வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்
இந்த கெட்டவார்த்தைதான்.
எனக்குள்...
பேசியவாறே முகசவரம்
செய்துகொண்டிருந்தேன்.
என் புலம்பலை கேட்டிருக்குமோ,
"எல்லா ஜாதி ரத்தமும் ஒரே நிறம்தான் "
சிரித்தது கையில் இருக்கும் கத்தி.
                                                          ----பாலா ----
  

மௌன மொழிகள்.




நான் யார் என்று....

தேடிகொண்டிருந்தேன்

விடை தேடும் பள்ளிமாணவாக,

எதுவும் பிடிபடவில்லை

நீரில் விழுந்த மழைதுளி போல்.

வரலாறும் தெரியாது

வாழ்க்கை பற்றியும் தெரியாது.

காலம் பல கடந்துவிட்டது

இன்றளவும் அதே கலங்கிய மனநிலையோடு.

எதாவது செய் என சொல்லும் மனது

என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறது.

ஊக்குவிக்க ஆள் இருந்தால்

"ஊக்கு" விற்பவன் கூட உலகை ஆள்வான்.

யாருக்கு தெரியும் ...

என்னை போல எத்தனை மனங்கள்

மௌன மொழிகளில் பேசிக்கொன்டிருக்கிறதோ!

                                       ---பாலா----

Sunday, January 1, 2012

காலச்சுவடு


கிசு கிசு..



கன்னியாகத்தான்
இருந்தேன் - யாரும் 
கண்டுகொள்ளவில்லை.
உன் கரம் பட்டவுடன் தான்
பூப்படைந்தேன்.
இப்போது என்னை காண 
எத்தனை கண்கள்.
வரிகள் எனும் வாரிசை
என் வயிற்றில் சுமக்கிறேன்
படிக்கும் கண்களுக்கு 
தெரியாமளாபோகும் - நான் 
கருவுற்றிருப்பது.
பேனாவிடம் காகிதம் கிசு கிசுத்தது. 
                           ----பாலா---   

சுகப்பிரசவம்


காதல்...


பேனாவின் சிறப்பு


கத்தியின் கூர்மையும் 
புத்தியின் கூர்மையும் 
எனக்கு அடிமை.
வெற்றிடங்களுக்கு 
விளக்கம் கொடுப்பதும் 
முகவரி தெரியாதவனுக்கு 
முகவரி கொடுப்பதும் என் கடமை.
இதிகாசங்களை துறந்து 
இலக்கியங்களை கடந்து 
எதிர்காலத்தை தான்டியும்
என் பயணம் தொடரும்.
வல்லுனர்கள் கூட- என்
வயதை கணிக்க விழி பிதுங்குவர்.
சிறிய சாதனைக்காக 
பெரிய பேனர்களில் என் கண்ணீரை 
காசாக்கும் போது - வலிதாங்கமல் 
வழக்கத்தை விட அதிகமாக அழுதுவிடுகிறேன்.
அதுகூட அவர்களுக்கு மிகபெரிய  விளம்பரம்தான்.
எத்தனை வரலாற்றை 
எழுதி இருந்தும் - தான்
என்ற அகங்காரம் இல்லாமல் 
தலை குனிந்தே வாழ்கிறேன்.
என்னை அடிமை படுத்துபவன் 
என்போல் தன்னடக்கத்தோடு வாழாமல் 
தலை நிமிர்ந்து பீழ்த்திக்கொல்லும்போது மட்டும் 
மௌனமாய் சிரிக்குறேன்.
                                        ---------பாலா-------




காலத்தை கடந்த காதல்


*கரடு முரடான என் 
வாழ்க்கைக்கு காரணம் தேடி 
நடந்துபோனேன்.
உன்னை...
கண்டவுடன் அனைத்தும் 
மறந்துபோனேன்.
--------------------------------------------------------------
யார் நீ!
உறங்க மறுத்த 
என் விழிகளுக்கு
விருந்து படைத்தவளே.
எதிர்காலம் தேடும் இந்த பித்தனை
சித்தன் ஆக்கியது உன் தரிசனம்.
இயற்கை வரைந்த ஓவியமே
இதோ உனக்காக நன் எழுதும் காவியம்!
----------------------------------------------------------------------
* சிக்கி முக்கி கற்களில்
 நெருப்பை கண்டவன் கூட
 திக்குமுக்காடி போவான் - உன்
 விழிகளின் வெப்பத்தை பார்க்கும் போது.
----------------------------------------------------------------------
* சக்கரத்தின் கண்டுபிடிப்பு
 நாகரிகத்தின் தொடக்கம் 
 உன் தரிசனம் இல்லா நாட்கள்
 எனக்கு வேதனையின்முடக்கம்.
----------------------------------------------------------------------
* உலோகங்களை கண்டுபிடித்தவனும்
 தோற்றுத்தான் போவன்- உன்
 உள்மன ஆயத்தை காணமுடியாமல்.
 செம்பு கண்டுபிடித்தவனுக்கு
 உன் மீது கோபம் - உன்
 அன்பு  கிடைக்கவில்லைஎன்று,
---------------------------------------------------------------------
* எத்தனையோ
 காதல்கள் பள்ளத்தில்
 இருந்தும்.
  என்றும் - உன் காதல்
 நிலைத்திருக்கும் என் உள்ளத்தில் .
----------------------------------------------------------------------
* விலங்குகளை 
 எதிர்த்து  வேட்டையாடினேன்  
  இயற்கையோடும் போராடினேன்
 இப்படி ஐம் பூதங்களுக்கும் அடங்காத
 என் மனம் 
 உன் ஐம் புலன்களைகண்டு
 அடங்கி போகிறது.
-----------------------------------------------------------------------
* நெருப்பில் வெந்து
 நீரில் நனைந்து
 வானில் பறந்து
 காற்றில் என் உயீர் கலந்து போகும்முன்
 உன் கண்களில் விழுந்து
 செவிழில் நுழைந்து
 மெழ்யில் கலந்து - வாழ் மொழியில் வாதடியாவது
 உன் இதயத்தில் இடம் பிடித்துவிடவேடவேண்டும் .
----------------------------------------------------------------------------------
* காட்டை கடந்து
 நாட்டிற்கு வந்தேன் - இது
 நாகரிகத்தின்வளர்ச்சி  - இவையாவும் 
 உன்னால் ஏற்பட்ட சூச்சி.
 மன்னர்களின் பேத்தியியே 
 ஓரபார்வையால்  என்னை சாய்த்தாயே!
 நெப்போலியனுக்கு  நெருங்கிய சொந்தமே
 நீ இல்லாமல்  எனக்கு கிடையாது வேறு பந்தமே!
 ------------------------------------------------------------------------------
  *அர்ஜுனனின் வில்வித்தையும்
   அனுமனின் சொல்வித்தையும்
   தாண்டவம் ஆடும் - உன்
   பேச்சிலும் வீச்சிலும்.
--------------------------------------------------------
* சங்ககால மன்னரான
  சேர, சோழ, பாண்டியனின்
  கண்ணில் நீ பட்டிருந்தால்
  ஆங்காங்கே   செதுக்கபட்டிருப்பாய் சிற்பமாக.
-----------------------------------------------------------
* என்னை ஆள பிறந்தவளே
   கலப்பிரர்களின் புலம்பலை கேட்டாய
   உன்னை காணாத நாட்கள் தான்
   வரலாற்றில் இருண்டகாலமாம் .
   பல்லவர்களின் படைப்பிற்கு - மகாபலிபுரம்
   உன் நினைவால் துடிக்கும் - என்
   இதயத்திற்கு என்றும் நீ தூங்காநகரம்.
------------------------------------------------------------
* நன் உன் மீது கொண்ட காதலுக்கு சாட்சி !
  சோழ மன்னர்களின் ஆட்சி,
   ஆயிரம் ஆண்டு கடந்தும் - அவன் புகழ்
   நீங்காமல் நிலைக்கிறது,
  இறவுகள் பல கடந்தும் என் 
  மனம்  தூங்காமல் தவிக்கிறது!
------------------------------------------------------------
* கரிகாலன் கட்டிய 
  கல்லணைக்கும் ஒரு காரணம் உண்டு ,
  அது உன் இதயத்தில் இருந்து
  எடுக்கப்பட்ட சிறு இரும்புத்துண்டு  
  மன்னர்களின் ஆட்சி கூட மாறியது
  என் மனதில் பதிந்த
  உன் காட்சி மட்டும் மாறவில்லை !
-------------------------------------------------------------
* இந்தியர்களையே
  ஏங்கவைத்திருக்கவேண்டும்
  உன் இடை!
  அதை கண்டுகொள்ளதான்
  அடிக்கடி  வந்துபோனதோ
  ஆங்கிலேயரின்படை !
--------------------------------------------------------------
*காதலனை தேர்ந்தெடுக்க
 நீ நடத்திய  நாடகம் தான்
 முதல் உலகப்போரா !
 ஆங்கிலேயரிடம்  அகிம்சை
 முறையில் பெறப்பட்டதே சுதந்திரம்
 உன்னை கண்ட நாள் முதல்
 அது பறிபோனதே நிரந்தரம் !
--------------------------------------------------------------
* அறிவியலின் அதிசயமா நீ
   புவிஈர்ப்பு   விசையை கண்ட
  நீயூட்டனுக்குள்ளும்  மாற்றத்தை
  ஏற்படுத்தி இருக்கும்  உன் விழிஈர்புவிசை !
  உன் இதயத்தை
  நன்கு ஆராய்ந்துவிட்டுத்தான்
  அணுவை பிளக்க முடியாது 
  என்றான  ரூதர்ட்போர்டு.
-------------------------------------------------------------
 உன்  கோபத்திற்கு
   காரணம் தேடித்தான் எலக்ட்ரானை
   கண்டுபுடித்தானா தாம்சங்
   நீல நிற கடலுக்கு
  காரணம் சொன்னது ராமன் விளைவு  
  உன் நிழலை கூட
  சுமந்து  வருகிறது எந்தன் நினைவு 
------------------------------------------------------------ 
* E=MC2  இது
  ஐயன்ஸ்டீன் பார்முலா
  எதிரியும் மயங்கிபோவது
  உன் கருவிழி பார்வையினாலா
  அன்பு கட்டும் பொது 
  அணுவைபோல் ஒடுங்கி  போகும் நீ 
  கோபம் கொள்ளும்போது ஏன்
   நீயூட்டனின் மூன்றாம் விதியாகிராய்
------------------------------------------------------------
* அறிவியலின் அடுத்த கட்டமே !
   என் இறுதி மூட்சும் உன்னை சுற்றுமே
   உன்மீது கொண்ட மோகம் தான்
  கருங்கூந்தலை கடன் வாங்கி கொண்டதா  மேகம் 
  உதட்டு சாயத்தோடு நி துப்பிய
  எச்சிலின் எதிரொலிதான்
   மேகத்தின் மீது வரையப்பட்ட வானவில்லா
-------------------------------------------------------------
* ராணுவ ரகசியமாய் இருக்கும்
  உன் மௌனத்தை ஆராயத்தான்
  அனுப்பப்பட்டதா ஆரியப்பட்டா !
  இன்று உலகையே
  அட்ச்சுறுத்தும் புரமோஷ்  ஏவுகனை
  உன் ஒட்டுமொத்த கோபத்தின் வினை !
 அதனால்தான்  உன்னுடன் நேரில்
  பேச அச்சப்பட்டு கைபேசியை
  கண்டுபிடித்தானோ என்னவோ !
-------------------------------------------------------
* உலகையே ஒன்றிணைக்கும்
   இணையதளமா - உன் இதயகளம்
  பார்த்தவுடன் அனைவரும்
 பதியவைக்கின்றனர் தன் காதலை !
 சூரியனும் நிலவும்
 சந்திக்கும் அன்று சூரியகிரகணம்
 என்றாவது உன் இதயம் என்னை பற்றி
 சிந்திக்குமே அன்றே நம் திருமணம்.
--------------------------------------------------------
*கற்காலத்தில்   இருந்து
 நான் கடந்து வந்த பாதையை
 பார்த்தல் -  நீ தான் என்
 எதிர்காலம் என்று தெளிவாக தெரியும்
 இது உனக்கும் ஓர் நாள் புரியும்.
----------------------------------------------------
* காலங்கள் பல கடந்தும்
  இன்னும் கானல் நீராகதான்
  உன்னிடத்தில் என் காதல்
  நானும் ஒரு கஜினிமுகமதுதான்
  உன் இதயம் எனும்
  கோட்டையை அடைய பலமுறை
 படையெடுத்தும் தோற்றுபோனேன்.
------------------------------------------------------
* என்னவோ .....
  வரலாறு உன்னை
  உற்றுபார்க்கிறது
 அனேகமாக அடுத்த அமைதிக்கான
 நோபல்பரிசு உனக்குத்தான்.

                                         காதலுடன் பாலா (எ) சுதந்திரன்

"புத்தகம்"

கள்வனே!
 என்...
 அனுமதி இல்லாமல்
 என்னை தொடுகிறாய்,
 உன் மோக பசிக்காக
 புரட்டி எடுக்கிறாய்,
 என்னுள்
 எதையோ தேடி அலைகிறாய்,
 பின்-எதுவும் தெரியாதவன் போல் நடிக்கிறாய்,
 உன் ஆசை 
முடிந்த உடன் மூடி மறைக்கிறாய்,
பின் கண்டும் காணாதவன் போல் நடக்கிறாய்......
வருத்தமுடன் நான்.
 இப்படிக்கு "புத்தகம்".